காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ரூ.3.63 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ஜெயச்சந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு
காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ரூ.3 கோடியே 63 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் கட்டுமான பணிகள், தார்சாலை அமைக்கும் பணிகள், கழிவுநீர் சுத்தம் செய்யும் திட்டப்பணிகள் ரூ.3 கோடியே 63 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் நடந்து வருகிறது. இந்த வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 5-ல் அப்பாசாமி தெருவில் கழிவுநீர் கால்வாய், தார் சாலை அமைக்கும் பணிகளையும், தொடர்ந்து கரகூர் பகுதியில் உள்ள வளமீட்பு பூங்காவில் திடகழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.69.91 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை தரம் பிரிக்கும் கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ரூ.2 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுீர் அகற்றும் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பேரூராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, இளநிலை பொறியாளர் நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story