உதவி செய்வதாக ஏமாற்றி முதியவரிடம் இருந்து ரூ.2.46 லட்சம் அபேஸ் மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

x
தினத்தந்தி 21 Dec 2020 5:46 AM IST (Updated: 21 Dec 2020 5:46 AM IST)
t-max-icont-min-icon

உதவி செய்வதாக கூறி ஏமாற்றி முதியவரிடம் ரூ.2.46 லட்சம் அபேஸ் செய்த ஆசாமியை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவுரங்காபாத், 

அவுரங்காபாத்தை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் தனியார் வங்கியில் ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். இவர் கடந்த 4-ந்தேதி வங்கி கணக்கின் சேமிப்பு விவரங்களை கண்டறிய அங்குள்ள ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். ஆனால் அவருக்கு எவ்வாறு அதை பார்ப்பது என தெரியவில்லை.

அப்போது முதியவரை நெருங்கிய ஒரு மர்ம ஆசாமி தான் உதவி செய்வதாக கூறி ஏ.டி.எம். அட்டையை வாங்கினார். பின்னர் முதியவர் ரகசிய நம்பரை ஆசாமியிடம் தெரிவித்துள்ளார். இவர் எவ்வளவு பணம் வங்கி கணக்கில் இருக்கிறது என பார்த்து கூறியுள்ளார்.

இதையடுத்து ஆசாமியிடம் இருந்து கார்டை பெற்று கொண்ட முதியவர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து 10 நாள் கழித்து முதியவர் வங்கியின் புத்தகத்தை பதிவு செய்தார். அப்போது தனது கணக்கில் வெறும் ரூ.292 மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து தான் வைத்திருந்த வங்கி ஏ.டி.எம். கார்டை பார்த்த போது வேறு வங்கிக்கு சொத்தமானது என்பது தெரியவந்தது. அப்போது தான் மர்ம நபர் தனது கார்டை பெற்றுக்கொண்டு வேறு கார்டை கொடுத்து ஏமாற்றியதும், அதன்மூலம் தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை அவர் அபேஸ் செய்ததும் முதியவருக்கு தெரியவந்தது.

உதவி செய்வதாக ஏமாற்றி
முதியவரிடம் இருந்து ரூ.2.46 லட்சம் அபேஸ்
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

இது குறித்து முதியவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி வேதந்த் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரிடம் பணத்தை அபேஸ் செய்த ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து முதியவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி வேதந்த் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரிடம் பணத்தை அபேஸ் செய்த ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story