கே.வி.குப்பம் அருகே காவனூர் ஏரி நிரம்பியது
கே.வி.குப்பம் அருகே காவனூர் கிராமத்தில் காவனூர் ஏரி அமைந்துள்ளது. இது 489 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த 2017-ம் ஆண்டு நிரம்பி வழிந்தது.
கே.வி.குப்பம்,
கே.வி.குப்பம் அருகே காவனூர் கிராமத்தில் காவனூர் ஏரி அமைந்துள்ளது. இது 489 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த 2017-ம் ஆண்டு நிரம்பி வழிந்தது. அதற்கு பிறகு தற்போது நிரம்பி வழிகிறது. நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது.
இந்த ஏரி கே.வி.குப்பம், பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நீர் ஆதாரமாய் அமைகிறது.
தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இதையடுத்து கிராம மக்கள் நேற்று ஏரிக்கு சென்று கிடா வெட்டி, பொங்கல் வைத்து, பட்டாசு வெடித்து, பம்பை மேளம் முழங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ., மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் டி.கோபி மற்றும், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story