பணி நிரந்தரம் செய்வதாக கூறி ஊழியரிடம் பணம் வசூலித்து மோசடி நிதி நிறுவன உரிமையாளர் கைது
பரமக்குடியில் பணி நிரந்தரம் செய்வதாக கூறி ஊழியரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் திலகேஸ்வரன். இவருடைய மகன் கபிலன் (வயது 29). இவர் பரமக்குடியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். அப்போது பணியை நிரந்தரம் செய்யவும், பணத்தை கையாள்வதற்காகவும் ரூ.30 ஆயிரம் வைப்பு தொகையை மேலாளர் கவுசல்யா, துணை மேலாளர் அருண்குமார் ஆகிேயாரிடம் கொடுத்தார். இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் பணிநிரந்தரம் செய்யாமல், சம்பளத்தை முறையாக வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து கபிலன் விசாரித்தபோது மேற்கண்ட நிறுவனம் போலி என தெரிந்ததால் கொடுத்த பணத்தையும், சம்பள பாக்கியையும் சேர்த்து ரூ.51 ஆயிரத்து 500-ஐ திரும்ப கேட்டார். அப்போது பணத்தை தர மறுத்து அவர்கள் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்த நிறுவனத்தினர் கபிலனை போல 14 பேரிடம் பணி நிரந்தரம் செய்வதாக கூறி பணம் வசூலித்து அவர்களுக்கு திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது..
நிதி நிறுவன உரிமையாளர் கைது
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து கபிலன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து துணை மேலாளர் பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்த ஜெயசீலன் மகன் அருண்குமார் (23) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இவர் அளித்த தகவலின் பேரில் மோசடிக்கு காரணமாக இருந்த நிதிநிறுவன உரிமையாளரை தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் குறித்த ரகசிய தகவல் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஜலகண்டபுரம் கொல்கரனூர் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் ஆனந்த் (27) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலாளர் கவுசல்யாவை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story