போலீசார் எப்போதும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை
போலீசார் எப்போதும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
நிறைவு விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு சார்பில் போலீசாருக்கு காவலர் நிறைவாழ்வு பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி 75-வது பிரிவின் பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நிதானத்துடன்...
மனஅழுத்தம் என்பது போலீசாருக்கு மட்டும் அல்ல. எல்லா துறையினருக்கும் உள்ளது. மனஅழுத்தத்தை போக்க போலீசார் கிடைக்கும் நேரத்தை, தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் செலவிட வேண்டும். நல்ல நெறிமுறைகளை கடைபிடித்து மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும்.
போலீசார் எப்போதும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பயிற்சியில் கற்றுக் கொண்டதை குடும்பத்திலும், பணியிடங்களிலும் செயல்படுத்தினால், மனஅழுத்தம் இல்லாமல் சிறப்பாக செயல்படலாம் என்று கூறினார். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீஹா, நாகலட்சுமி, உளவியல் நிபுணர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story