திருச்சியில் அரிய நிகழ்வு: வானில் அருகருகே வியாழன்-சனி கோள்கள்
திருச்சியில் வானில் அரிய நிகழ்வாக வியாழன், சனி கோள்கள் அருகருகே வந்ததை பொதுமக்கள், மாணவர்கள் கண்டு வியந்தனர்.
திருச்சி,
மத்திய மற்றும் மாநில அறிவியல் தொழில் நுட்ப மையம் (விஞ்ஞான் பிரச்சார்) , அறிவியல் பலகை, திருச்சி அஸ்ட்ரோ கிளப், கலிலியோ அறிவியல் மையம் சார்பில் பல்வேறு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருச்சியில் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதில் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்பெற்று வருகின்றனர்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அறிவியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பிரத்யேக செயலி மூலமும் யூ-டியூப் மூலமும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் வியப்பு
அந்த வகையில், பல நூறாண்டுகளுக்கு பின் வியாழன் மற்றும் சனி கோள்கள் வானில் அருகருகே வந்த அரிய நிகழ்வைக் நேற்று மாலை 6.30 மணி அளவில், திருச்சி காஜாமலை அருகே இந்தியன் வங்கிக் காலனி பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தொலை நோக்கி மூலம் கண்டு வியந்தனர். திருச்சி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் பாலாபாரதி தலைமையிலான குழுவினர், தொலை நோக்கிகள் உதவியுடன் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் காண ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சி குறித்து அஸ்ட்ரோ கிளப் செயலாளர் பாலாபாரதி கூறியதாவது:-
400 ஆண்டுகளுக்கு ஒருமுறை
சுமார் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அரிய நிகழ்வைக்காண தொலை நோக்கிகள் ஏற்பாடு செய்திருந்தோம். மேலும் தொலை நோக்கி மூலம் நேரடி காட்சிகளை ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 6.30 மணி முதல் இரவு 7.15 மணி வரையில் வானம் தெளிவாக இருந்ததால் இக்காட்சியை தெளிவாக காண முடிந்தது. சுமார் 20 ஆண்டுக்கு ஒருமுறை இந்த இரு கிரகங்களும் அருகருகே வந்தாலும் 400 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மிகவும் அருகில் வருவதுபோல தெரியும்.
வெறும் கண்களால் காணும்போது ஒரே கோள்போல காட்சி தரும். இவ்வாறு அருகருகே காணப்பட்டாலும் இரு கோள்களுக்கிடையிலான இடைவெளி சுமார் 60 கோடி கிலோ மீட்டர் தொலைவாகும். இதுபோன்ற நிகழ்வை இதற்கு முந்தைய அறிவியலார் கண்டது குறித்து சரியான பதிவுகள் இல்லை.
சிறிது நேரம் மட்டுமே தெரிந்ததாகவும், மேகமூட்டமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த முறை வரலாற்று அற்புத நிகழ்வை நன்றாக கண்டு ரசிக்கப்பட்டதுடன் காட்சிகளை பதிவும் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Related Tags :
Next Story