ஐ.ஐ.டி. முன்பு முற்றுகை போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது


ஐ.ஐ.டி. முன்பு முற்றுகை போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2020 1:05 AM IST (Updated: 23 Dec 2020 1:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐ.ஐ.டி.யின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

ஐ.ஐ.டி.களில் இட ஒதுக்கீடு கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து பரிந்துரைகள் செய்வதற்காக ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் ராமகோபால் ராவ் தலைமையில் மத்திய அரசால் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழு பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் ஆகிய நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கக் கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில், பேராசிரியர் ராமகோபால் ராவ் தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி.யின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் மற்றும் நிர்வாகிகள் ஆவடி நாகராஜன், திலீபன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.

Next Story