சோமவார்பேட்டை தாலுகாவில் சம்பவம்: ஓட்டுச்சாவடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் ஓட்டுச்சாவடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
குடகு,
குடகு மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. சோமவார்பேட்டை தாலுகா கும்பூரு கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் எம்.எல்.ஏ. அப்பச்சுரஞ்சன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். மடிகேரி மற்றும் சோமவார்பேட்டை ஆகிய தாலுகாக்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது.
சோமவார்பேட்டை தாலுகா ஹெப்பலே கிராமத்தில் வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது மீது தடியடி நடத்தி விட்டியடித்தனர்.
குஷால்நகர், குட்டேஒசூரு, ஹெப்பாலே, சுண்டிகொப்பா உள்பட பல்வேறு கிராமங்களில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளுக்கு மாவட்ட கலெக்டர் அனீஸ் கண்மணி ஜாய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘‘வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது. அதன்படி வாக்காளர்கள் முகக்சவசம் அணிந்து வாக்களித்தனர். மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது’’ என்று கூறினார்.
Related Tags :
Next Story