கும்பகோணம் அருகே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து மறியல் போக்குவரத்து பாதிப்பு
கும்பகோணம் அருகே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவிடைமருதூர்,
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த 4 நாட்களாக ரேகை பதிக்கும் எந்திர தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் தினமும் பொருட்கள் வாங்க கடைக்கு வந்து ஏமாந்து திரும்பும் பொது மக்கள் நேற்று ஆத்திரம் அடைந்து
காங்கேயன் பேட்டை ரேஷன் கடை முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து கையில் காலிக்கேன்களுடன் விராலிமலை பஸ் நிறுத்தம் அருகே கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், துணைபோலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் எந்திர தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு இன்று(புதன்கிழைம) முதல் தடையில்லாமல் பொருட்கள் வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதனையொட்டி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story