டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மனித சங்கிலி - ஆர்ப்பாட்டம் ஒரத்தநாடு அருகே நடைபெற்றது
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரத்தநாடு அருகே மனித சங்கிலி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒரத்தநாடு,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புலவன்காட்டில் விவசாயிகள் சார்பில் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டு உண்ணாவிரதத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
மனித சங்கிலி
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ் உண்ணாவிரதத்தில் ஈடுபட அனுமதி இல்லை என்று விவசாயிகளிடம் தெரிவித்தனர். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புலவன்காடு ஊராட்சி தலைவர் மெய்க்கப்பன் தலைமையில் விவசாயிகள் சாலையில் கைகோர்த்து மனித சங்கிலி நடத்தியதோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.

Related Tags :
Next Story