ஆழ்வார்குறிச்சி அருகே பரிதாபம் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை


ஆழ்வார்குறிச்சி அருகே பரிதாபம் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
x
தினத்தந்தி 23 Dec 2020 9:00 AM IST (Updated: 23 Dec 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி அருேக திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடையம்,

கடையம் அருகே உள்ள பாப்பாங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் உலகநாதன் மகன் ராஜ்குமார் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், உமாதங்கம் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ராஜ்குமார் தனிக்குடித்தனம் செல்ல விரும்பியதாகவும், அதற்கு குடும்பத்தினர் தற்போது தனிக்குடித்தனம் செல்ல வேண்டாம் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் பாப்பாங்குளம்-ஆழ்வார்குறிச்சி சாலையில் உள்ள பழமைவாய்ந்த கோவில் பகுதியில் நேற்று காலை ராஜ்குமார் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வீட்டில் தனிக்குடித்தனம் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

சோகம்

இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story