கர்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி, மண்எண்ணெய்யுடன் லாரி பறிமுதல் 2 பேர் கைது


கர்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி, மண்எண்ணெய்யுடன் லாரி பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2020 5:45 AM GMT (Updated: 23 Dec 2020 5:45 AM GMT)

பழைய இரும்பு பொருட்களுக்கு கீழ் மறைத்து கர்நாடகத்துக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி, 210 லிட்டர் மண்எண்ணெயை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

வாணியம்பாடி,

வாணியம்பாடி- ஆலங்காயம் ரோட்டில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச்செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாரி ஒன்று அந்த வழியாக வந்தது.

அதனை நிறுத்தியபோது பெண் உள்பட 3 பேர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 2 பேரை பிடித்தனர். பெண் தப்பி விட்டார். லாரியில் சோதனையிட்டபோது பழைய இரும்பு பொருட்களை ஏற்றி அதற்கு கீழ் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் 6 பேரல்களில் தலா 35 லிட்டர் வீதம் 210 லிட்டர் ரேஷன் மண்எண்ணெயும் இருந்தது.

கைது

பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது ஒருவர் லாரியை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த டிைரவர் மோகன் (வயது 25) என்பதும் மற்றொருவர் வாணியம்பாடி- வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விமல் (23) என்பதும் தெரியவந்தது. அவர்கள் கூறுகையில் பாரத் நகர், உமர் நகர், மில்லத்நகர் பகுதிகளில் வீடுகளில் பதுக்கி வைத்து இவற்ைற லாரி மூலம் கர்நாடக மாநிலத்துக்கு கடத்திச்செல்வதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் மண்எண்ணெயுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்து பிடிபட்ட டிரைவர் மோகன் மற்றும் விமலை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருவதோடு இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story