சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2020 6:15 AM IST (Updated: 24 Dec 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இணை செயலாளர் இளங்கோவன், பாஸ்கரன், சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையை 5 லட்சமாக வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணப்பலன்களை ஓய்வுபெறும் நாளிலே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story