எதிர்காலத்தில் அரசியல் பூகம்பம் நிகழும் மையமாக சேனா பவன் இருக்கும் - சஞ்சய் ராவத் பேச்சு


எதிர்காலத்தில் அரசியல் பூகம்பம் நிகழும் மையமாக சேனா பவன் இருக்கும் - சஞ்சய் ராவத் பேச்சு
x
தினத்தந்தி 24 Dec 2020 6:21 AM IST (Updated: 24 Dec 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

எதிர்காலத்தில் அரசியல் பூகம்பம் நிகழும் மையமாக சேனா பவன் இருக்கும் என சஞ்சய் ராவத் எம்.பி. பேசி உள்ளார்.

மும்பை, 

மும்பை தாதரில் உள்ள சிவசேனா தலைமை அலுவலகமான சேனா பவனில், பா.ஜனதாவில் இருந்து விலகிய சிலர் சிவசேனாவில் இணையும் விழா நடந்தது. விழாவில் பேசிய சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக நாம் அவர்களின் கட்சி (பா.ஜனதா) அப்படியே இருப்பதாகவும், அங்கு எந்த தலைவரும் தனித்துவிடப்படவில்லை என்பதையும் கேட்டு வருகிறோம். சில நாட்கள் பொறுத்து இருந்து பாருங்கள், யார் தவறானவர்கள் என்பது உங்களுக்கு தெரியவரும். தொண்டர்கள் சிவசேனாவில் வந்து சேருகின்றனர். ஒரு விஷயத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள், எதிர்காலத்தில் அரசியல் பூகம்பங்கள் நிகழும் மையமாக சேனா பவன் இருக்கும்.

அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகள் மட்டுமல்ல அடுத்த 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு மகாவிகாஸ் அகாடி அரசு தான் ஆட்சி செய்யும் என மக்கள் நினைக்கின்றனர். உத்தவ் தாக்கரே மாநிலத்தை போல, தேசிய அரசியலிலும் ஈடுபட வேண்டும் என மக்கள் நினைகின்றனர். அது நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதாவை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், பிற கட்சிகளில் இருந்து தலைவர்கள் சேர உள்ளதாகவும், அவரது கட்சி வருங்காலத்தில் தனித்து ஆட்சியை பிடிக்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story