அரியாங்குப்பத்தில், துணை தாசில்தார் வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை
அரியாங்குப்பத்தில் துணை தாசில்தார் வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம்,
அரியாங்குப்பம் காக்காயந்தோப்பு சீனிவாசா கார்டன்ஸ் பகுதியை சேர்ந்தவர் பிருத்திவி. இவர் காரைக்காலில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விமலா. இவர்கள் அரியாங்குப்பம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்றதும், புதிய வீடு கட்டுமான பணிகளை பார்்வையிடுவதற்காக விமலா சென்று விடுவார். கடந்த சில நாட்களுக்கு முன் புதிய வீடு கட்டுமான செலவுக்காக பணம் தேவைப்பட்டது. இதற்காக வீட்டில் இரும்பு பெட்டியில் வைத்திருந்த பணத்தை விமலா எடுக்க சென்றார். ஆனால் அதில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
கணவன், மனைவி இருவரும் அடிக்கடி வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நைசாக வீட்டுக்குள் புகுந்து அலமாரியில் வைத்திருந்த இரும்பு பெட்டி சாவியை எடுத்து, திறந்து பணத்தை திருடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story