திருவாரூரில் இருந்து சென்னைக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட 10 குழந்தைகள் நலமுடன் ஊர் திரும்பினர்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 குழந்தைகள் நலமுடன் திரும்பினர்.
திருவாரூர்,
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாவட்ட தொடக்க இடையூட்டு சேவை மையம் மற்றும் சென்னை தனியார் மருத்துவமனை இனணந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்குமான இலவச பரிசோதனை முகாம் கடந்த மாதம் 4-ந் தேதி நடந்தது. இதில் உயர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட 10 குழந்தைகள் தனி வாகனம் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வரவேற்றார்
இந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து நலமுடன் ஊர் திரும்பினர். அவர்களை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் வரவேற்று இனிப்பு வழங்கினார். அப்போது துணை முதல்வர் ராஜாராம், குழந்தை நலத்துறை தலைவர் கண்ணன், துணை கண்காணிப்பாளர் அன்சாரி, டாக்டர்கள் செந்தில்குமார், தர்மராஜா உள்பட பலர் இருந்தனர்.

Related Tags :
Next Story