ஒரத்தநாடு-திருவோணம் ஒன்றியங்களில் 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்
ஒரத்தநாடு மற்றும் திருவோணம் ஒன்றியங்களில் 6 இடங்களில் அம்மா மினி கிளிக்குகளை ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. நேற்று திறந்து வைத்தார்.
ஒரத்தநாடு,
ஒரத்தநாடு ஒன்றியத்தை சேர்ந்த காசவளநாடு கோவிலூர், பொய்யுண்டார்கோட்டை, குலமங்கலம், திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த பின்னையூர், தெற்குக்கோட்டை, பாதிரங்கோட்டை ஆகிய 6 இடங்களில் தமிழக முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம்.பி.கலந்துகொண்டு அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் பயன் பெறும் திட்டம்
நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு கிராமப்புற மக்கள் உடனடியாக மருத்துவ வசதியை பெறும் நோக்கில் புதிதாக அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மினி கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று உடல்நிலையை நன்கு கவனித்து ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இது மிகவும் வசதியாக இருக்கும். மேலும் கொேரானா பரவலை கட்டுப்படுத்துவதற்கும் இந்த அம்மா மினி கிளினிக்கின் மருத்துவ பணிகள் பயனுள்ளதாக அமையும். எனவே கிராமப்புற மக்கள் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம், மாவட்ட ஆவின் பால்வளத்தலைவர் ஆர்.காந்தி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஒரத்தநாடு தெற்கு கோவிதனபால், ஒரத்தநாடு வடக்கு ரவிச்சந்திரன், திருவோணம் வடக்கு சத்தியமூர்த்தி, திருவோணம் தெற்கு மதியழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதாரவிச்சந்திரன், முன்னாள் ஒரத்தநாடு ஒன்றியக்குழு தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சுமதிகார்த்திகேயன், சகுந்தலாதிருஞானம், பொதுக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட பிரதிநிதி பின்னையூர் ராசு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பின்னையூர் இந்திராகவாஸ்கர், தெற்குக்கோட்டை நாடிமுத்து, பாதிரங்கோட்டை பேபிசுதாமுருகேசன், பின்னையூர் ஊராட்சி தலைவர் நிரோஜாபாக்கீஸ்வரன், ஒன்றிய பேரவை செயலாளர் சந்திரசேகரன், ஒன்றிய இளைஞர் பாசறை பொருளாளர் காமராஜ், தெற்குக்கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் தம்பியப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
தஞ்சையை அடுத்த ராவுசாப்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: 80 வயதானவர்கள் தபால் வாக்கு போடக்கூடாது என நீதிமன்றத்திற்கு செல்வதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?
பதில்: தேர்தல் கமிஷன் 80 வயதானவர்களுக்கு தபால் வாக்கு கொடுக்கலாம் என யோசனை செய்கிறது. அவரவர்கள் தங்களது கட்சியின் கருத்துக்களை சொல்கிறார்கள். கடைசியில் முடிவு எடுக்கக்கூடியது தேர்தல் கமிஷன் தான்.
கேள்வி: முதல்-அமைச்சர் வேட்பாளரை தேசிய பா.ஜ.க. தலைமை தான் முடிவு செய்யும் என சொல்கிறார்களே?
பதில்: கூட்டணி கட்சியினர் அவரவர் கருத்துக்களை சொல்கிறார்கள். அ.தி.மு.க.வை பொறுத்தவரை முதல்-அமைச்சர் வேட்பாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான்.
கேள்வி: தமிழக கவர்னரிடம் அ.தி.மு.க. மீது ஊழல் பட்டியலை தி.மு.க.வினர் கொடுத்து இருக்கிறார்களே?
பதில்: முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மீது கவர்னரிடம் எம்.ஜி.ஆர். புகார் கொடுத்தார். அப்போது இது தொடர்பாக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. யார் வேண்டுமானாலும் யார் மீதும் ஊழல் பட்டியல் கொடுக்கலாம். கடைசியாக என்ன நடப்பது என்பது தீர்ப்பு வரும்போது தான் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் எம்.பி. பரசுராமன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விணுபாலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துமாறன், முன்னாள் ஊராட்சி செயலாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story