குமரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம்
குமரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதே போல் குமரி மாவட்டத்திலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.
நாகர்ேகாவில் மாநகராட்சி 4-வது வார்டு தெலுங்கு செட்டித் தெருவில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் மற்றும் வார்டு மக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு மாநகர செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங் முன்னிலை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட செயாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சி மாற்றம்
தமிழகத்தில் உள்ள ஆட்சியினரால் விதவைகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் கூட வழங்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது இல்லை. சாலைகள் சீரமைப்பு முதல் அனைத்திலும் ஊழல் ஊடுருவி விட்டது. கியாஸ் மானியம் நிறுத்தப்பட்டு, அதன் விலையும் இருமடங்காக அதிகரித்துள்ளது.
மேலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் என எங்கள் தொகுதிகளை அரசு புறக்கணித்து வருகிறது. இதனால் சிறு தேவைகளுக்கு கூட நாங்கள் போராட்டம் நடத்த வேண்டியது உள்ளது. ஏழைகள், நடுத்தர மக்கள் இனி நிம்மதியாக வாழ ஆட்சி மாற்றம் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், நிர்வாகிகள் வேல்முருகன், முருகபூபதி, அஜித் சாய்தாத், பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூது, பன்னீர் செல்வம், வக்கீல் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தடிக்காரன்கோணம்
தோவாளை ஒன்றியம் தடிக்காரன்கோணம் ஊராட்சி பகுதியில் நடந்த கிராம சபை ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை விளக்கினார். மேலும் கூட்டத்தில் பொதுமக்கள் ஆதரவோடு அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் மாவட்ட பொருளாளர் கேட்சன் தடிக்காரன்கோணம் ஊராட்சி தலைவர் பிராங்கிளின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் சதீஷ் கலந்து கொண்டனர். இதேபோன்று பூதப்பாண்டி பேரூராட்சி சாட்டுப்புதூர் மற்றும் ஆரல்வாய்மொழி பேரூராட்சி எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
அகஸ்தீஸ்வரம்
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் பரமார்த்த லிங்கபுரம் நேதாஜி நகரில் நடந்தது கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி தலைமை தாங்கினார் அகஸ்தீஸ்வரம்.பேரூர் செயலாளர் பாபு முன்னிலை வகித்தார் இதில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர். எஸ்.பார்த்தசாரதி, பேராசிரியர் டி.சி. மகேஷ், கொட்டாரம் பேரூர் கழகச் செயலாளர் வைகுண்டபெருமாள், கன்னியாகுமரி பேரூர் கழக செயலாளர் குமரி ஸ்டீபன், சுசீந்திரம் பேரூர் கழக செயலாளர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க.வின் கிராம சபைக் கூட்டத்திற்கு ஆதரவாக பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது

Related Tags :
Next Story