குமாரபாளையம் தி.மு.க. நிர்வாகி கொலை: படுகாயம் அடைந்த கோழி இறைச்சி கடைக்காரர் சாவு


குமாரபாளையம் தி.மு.க. நிர்வாகி கொலை: படுகாயம் அடைந்த கோழி இறைச்சி கடைக்காரர் சாவு
x
தினத்தந்தி 24 Dec 2020 11:57 AM IST (Updated: 24 Dec 2020 11:57 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையத்தில் தி.மு.க. நிர்வாகி குத்திக்கொைல செய்யப்பட்ட சம்பவத்தில் தடுக்க முயன்ற கோழி இறைச்சி கடைக்காரரும் இறந்தார்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள காவிரி நகரில் கடந்த 20-ந் தேதி இரவு தி.மு.க. வார்டு செயலாளர் சரவணன் என்பவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற முரளிதரன் (வயது 28), பிரபாகரன் (40) ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து முரளிதரன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், பிரபாகரன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மெக்கானிக் பிரகாஷ், கொலைக்கு உதவியதாக அவருடைய நண்பர் கோவிந்தராஜன் ஆகியோர் கடந்த 21-ந் தேதி மாலை திருச்செங்கோடு கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

காதல் திருமணம்

இந்தநிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முரளிதரன் நேற்ற முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிேரத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்து போன முரளிதரன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், இவர் ஜீவா (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து குமாரபாளையம் காவிரி நகரில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. ஜீவா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கத்திக்குத்தில் 2 பேர் பலியான சம்பவம் குமாரபாளையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story