சோளிங்கர் அருகே சாலையில் பள்ளம் தோண்டியதை கண்டித்து பொதுமக்கள் மறியல்
சோளிங்கரை அடுத்த ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜ் நகரில் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சோளிங்கர்.
ராணிப்பேட்டை மெயின் ரோட்டிலிருந்து, கோவிந்தராஜ் நகருக்கு செல்லும் சாலை தங்கள் பட்டா நிலத்தில் செல்வதாகக்கூறி ராமாபுரத்தை சேர்ந்த சிலர் சாலையில் பள்ளம் தோண்டி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதுபற்றி தகவலறிந்த சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், பாஸ்கர் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் 40 ஆண்டு காலமாக இந்த சாலை் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். திடீரென்று சிலர் பட்டாவாங்கியிருப்பதாக கூறுகிறார்கள். கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வருவாய் துறையினர் வந்து அளவிட்டு இது 20 அடி சாலை என்று கூறிச் சென்றுள்ளனர் என்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார்தெரிவித்து அவர்களை கலைந்து போகச்செய்தனர்.
Related Tags :
Next Story