இரும்பேடு ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு விழா - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு
ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார்.
ஆரணி,
தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியக் குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட ஆவீன் துணைத் தலைவர் பாரி பி.பாபு, மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் வக்கீல் கே.சங்கர், வைகை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பி.ஆர்.ஜி.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் தரணிவெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர்கவுரிபூங்காவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யார் சுகாதார துணை இயக்குனர் அஜிதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மினி கிளினிக்கை, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் கடந்த ஆண்டு ஏரியில் மூழ்கி பலியான கோகுல் என்ற சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை, 5 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு கால ஆரோக்கிய கிட்டுகளை வழங்கி பேசினார்.
முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாமண்டூர் பி.சுப்பிரமணி, ஆரணி ஒன்றிய அ.தி.மு.க. துணைச் செயலாளர் கே.வேலு, பையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே. பெருமாள், சிவகாமிஜெகன், ஆரணி தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.வி.மூர்த்தி, ஏ.பி.வெங்கடேசன், கே.ஹரி, ஏ. ஸ்ரீதர், மற்றும் மருத்துவ குழுவினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் கோபி, கோவிந்தராஜ், குண்ணத்தூர் வி.எஸ்.செந்தில் உள்பட், பலரும் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story