பவானிசாகர் அணை பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
பவானிசாகர் அணை பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அணை பூங்கா
பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கம் பின்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா அமைந்துள்ளது. பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த அணை பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அணை பூங்கா மூடப்பட்டது.
அதன்பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பூங்கா கடந்த 14-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சொற்ப அளவில் மட்டுமே இருந்தது.
சுற்றுலா பயணிகள்
இந்த நிலையில் கடந்த வாரம் முதல் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணைக்கு வர தொடங்கி உள்ளனர்.
பூங்காவில் உள்ள புல் தரைகளில் அமர்ந்தபடி உணவு அருந்தும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகின்றனர். மேலும் குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் செல்போன்களில் செல்பி எடுத்தனர். சுற்றுலா பயணிகள் அதிகமாக வர தொடங்கியுள்ளதால் மீன் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story