கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி நூதன போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பயிர் காப்பட்டு தொகை வழங்க கோரி நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
பயிர் காப்பீட்டு தொகை
கயத்தார் தாலுகா கடம்பூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட சிதம்பராபுரம், குப்பனாபுரம், ஒட்டுடன்பட்டி, சங்கரபேரி, ஓம்நமாக்குளம், இளவேளங்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், பருத்தி, நெல், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு 2019-20-ம் ஆண்டுக்கான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தனர். தற்போது பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடம்பூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்கு தற்போது வரை பயிர்க் காப்பீட்டு தொகை கணக்கில் வரவு வைக்கப்படவில்லை கூறப்படுகிறது.
நூதன போராட்டம்
எனவே விரைந்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பருவமழை தாமதமாக பெய்த காரணத்தினாலும், படைப்புழு தாக்குதல், மஞ்சள் நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி தலைமையில் அக்கட்சியினர் மீனாட்சி அம்மன் படத்தை கையில் வைத்துக்கொண்டு, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கப்பிரதட்சனம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினார்கள். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story