கோவில்பட்டி நகரசபையில் 200 சுகாதார பணியாளர்களுக்கு காசநோய் பரிசோதனை
கோவில்பட்டி நகரசபையில், 200 சுகாதார பணியாளர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது.
காசநோய் முகாம்
தமிழகம் முழுவதும் 14-12-2020 முதல் 24-12-2020 வரை காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. ேதசிய காசநோய் அகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக துணை இயக்குனர் மருத்துவ பணிகள் டாக்டர் சுந்தரலிங்கம் ஆலோசனையின் பேரில் கடம்பூர், கழுகுமலை மற்றும் கோவில்பட்டி நகர்ப்புற பகுதிகளில் வீடு, வீடாக சென்று 6 ஆயிரத்து 652 நபர்களிடம் காசநோய் அறிகுறிகள் உள்ளனவா? என்று கேட்டறியப்பட்டது, இதில் 71 நபர்களிடம் "சிபிநாட்" முறையில் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 37 நபர்களுக்கு எக்ஸ்ரே மூலமாக காசநோய் பாதித்துள்ளதா? என பரிசோதிக்கப்பட்டது.
சுகாதார பணியாளர்கள்
நிறைவு நாளான நேற்று கோவில்பட்டி நகரசபையில் பணிபுரியும் 200 சுகாதார பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது
முகாமை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் சீனிவாசன் கலந்து கொண்டு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
காசநோய் அறிகுறிகள் தென்படும் நபர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தில் எக்ஸ்ரே மூலமாக காசநோய் பாதித்துள்ளதா? என சோதிக்கப்பட்டது. மேலும் காசநோயை கண்டறியும் அதி நவீன"சிபிநாட்" மூலமாகவும் பரிசோதிக்கப்பட்டது.
முகாமில் கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் ராஜாராம், மாவட்ட காசநோய் டி.ஆர்.டிபி. ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், காஜா நஜ்முதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story