தொட்டியம் பகுதியில் வாத்து வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள்


தொட்டியம் பகுதியில் வாத்து வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள்
x
தினத்தந்தி 25 Dec 2020 7:51 AM IST (Updated: 25 Dec 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் பகுதியில் வாத்து வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் ஆர்வமுடன் வளர்க்கிறார்கள்.

தொட்டியம்,

தொட்டியம் பகுதியில் விவசாயத்திற்கு மாற்றாக வாத்து வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் ஆர்வமுடன் வளர்த்து வருகின்றனர்.

வாத்து வளர்ப்பு தொழில்

தொட்டியம் காவிரிக்கரையை ஒட்டியுள்ள சீனிவாசநல்லூர், மகேந்திரமங்கலம், வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நெல், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடும் விவசாயிகளுக்கு அவ்வப்போது இயற்கை சீற்றங்களால் போதிய வருமானம் இன்றி அதிக வட்டிக்கு கடன் வாங்கி கடனை கட்டமுடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் பக்கத்து மாவட்டமான நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் வாத்து வளர்ப்பு தொழில் அமோகமாக நடைபெற்று வருவதை அறிந்த இப்பகுதியை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் விவசாயத்திற்கு மாற்றுத்தொழிலாக வாத்துக்களை வாங்கி வந்து இங்கு விற்று வந்தனர். பின்னர் படிப்படியாக அதிகளவில் வாத்துகளை வளர்க்க ஆரம்பித்தனர்.

மழையினால் தொழில் பாதிப்பு

கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக வாத்துக்களை வெளியில் மேய்ச்சலுக்கு விடுவது சிரமமாக இருந்தது. மேலும் தற்போது விவசாய நிலங்களில் நெல், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதால் வாத்துக்களை மேய்ச்சலுக்கு விடுவது பெரும் சவாலாக இருந்து வந்த நிலையில் தற்போது பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வரத்தும் ஓரளவு குறைந்துள்ளதால் வாத்துக்களை இளைஞர்கள் ஆர்வமுடன் வாய்க்கால்களில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.

வெறும் கறிக்காக வாத்துகளை வாங்கி வந்த நிலை மாறி தற்போது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பருவமுள்ள வாத்துக்களை வாங்கி வளர்க்க இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை இளைஞர்கள் தேர்வு செய்துள்ளனர். அவா்கள் இந்த வாத்து வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருவது பார்ப்பவர்களை தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும் ஒரு செயலாக இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Next Story