நாகை மாவட்ட பகுதிகளில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம்


நாகை மாவட்ட பகுதிகளில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2020 8:16 AM IST (Updated: 25 Dec 2020 8:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட பகுதிகளில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள ஏர்வாடி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கொங்கராயநல்லூர்

இதேபோல் கொங்கராயநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர் விவேக் முன்னிலை வகித்தார்.அதேபோல் நரிமணம் ஊராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் நரிமணம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், மாவட்ட துணை செயலாளர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மஞ்சுளா மாசிலாமணி, அபிநயா அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திட்டச்சேரி-திருமருகல்

திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட மரைக்கான்சாவடிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு பேரூர் பொறுப்பாளர் முகமது சுல்தான் தலைமை தாங்கினார். தி.மு.க. நிர்வாகிகள் முருகேசன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அவை தலைவர் செய்யது அகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருமருகல் வடக்கு ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சியில் தி.மு.க. சாா்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ப.செல்வம் தலைமை தாங்கினாா். .வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அஜிதா ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாய்மேடு

வாய்மேடு அருகே பண்ணத்தெரு ஊராட்சியில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார் தலைமை தாங்கினார். தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் பேரூர் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பிரபாகரன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வீரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ெதன்னடார்

வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் வாய்மேட்டை அடுத்த தென்னடார் ஊராட்சியில் தி.மு.க. சாா்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மறைமலை, வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் உதயம் முருகையன், அன்பு வேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story