புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை 363 கிராம் தங்கம், 435 கிராம் வெள்ளியும் கிடைத்தது
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. மேலும் 363 கிராம் தங்கம், 435 கிராம் வெள்ளியும் கிடைத்தது.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
தினமும் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டாலும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை செலுத்துவார்கள்.
உண்டியல் காணிக்கை
பக்தர்கள் செலுத்திய காணிக்கை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி உண்டியல் பணம் எண்ணும் பணி நடைபெற்றது. இதற்காக மாரியம்மன்கோவிலில் உள்ள அனைத்து உண்டியல்களும், அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள ஒரு இடத்திற்கு எடுத்துவரப்பட்டன.
பின்னர் அங்கு அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இந்து சமய அறநியைத்துறை உதவி ஆணையர் (நகை சரிபார்ப்பு) வில்வமூர்த்தி, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கவியரசு, பரம்பரை அறங்காவலர் பிரதிநிதி கோபாலகிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் வங்கி அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.13 லட்சம்
இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.13 லட்சத்து 15 ஆயிரத்து 745 கிடைத்தது. மேலும் 363 கிராம் தங்கமும், 435 கிராம் வெள்ளியும் கிடைத்தன.

Related Tags :
Next Story