ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் ரூ.50 ஆக உயர்வு


ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் ரூ.50 ஆக உயர்வு
x
தினத்தந்தி 25 Dec 2020 7:40 PM IST (Updated: 25 Dec 2020 7:40 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்குக்கு பின்னர் அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது.

இதற்கிடையே ஊட்டியில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது.

தாவரவியல் பூங்காவில் ஒரு நபருக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20, கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஒரு நபருக்கு ரூ.10 அதிகரிக்கப்பட்டு ரூ.50 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

சிறுவர்களுக்கு ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் ரோஜா பூங்காவில் ஒரு நபருக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.15 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு நபருக்கு ரூ.40 ,சிறுவர்களுக்கு ரூ.20 என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

திடீரென நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதுபோன்று வனத்துறையின் கீழ் செயல்படும் சுற்றுலா மையங்களில் நுழைவு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.10 அதிகரிக்கப்பட்டு ரூ.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, திடீரென்று கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கட்டணத்தை குறைக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.


Next Story