சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா


வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சயனகோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்த போது
x
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சயனகோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்த போது
தினத்தந்தி 26 Dec 2020 1:30 AM IST (Updated: 26 Dec 2020 12:27 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழா
கோவில்பட்டி நீலாதேவி- பூதேவி உடனுறை சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், காலை5 மணிக்கு திருமஞ்சனமும், காலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடத்தப்பட்டது.

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை சுந்தர ராஜபெருமாள் சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

சொர்க்கவாசல் திறப்பு
மாலை 6.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சுந்தரராஜபெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா தொற்று காரணமாக சுவாமிவீதிஉலா நேற்று நடைபெறவில்லை. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணைசூப்பிரெண்டு கலைக்கதிரவன் செய்திருந்தார்.

சொர்க்கவாசல் திறப்பு
கோவில்பட்டி நீலாதேவி- பூதேவி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோவிலில் வைகுண்டஏகாதேசி விழாவையொட்டி நேற்றுமாலை 6-30மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சுந்தரராஜபெருமாள் பல்லக்கில்அமர்ந்து எதிரே பல்லக்கில் இருந்த நம்மாழ்வார் சுவாமிக்கு காட்சி கொடுத்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்றுகோஷம் போட்டார்கள். பின்னர், எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் சுந்தரராஜபெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். கொரோனாதொற்று காரணமாக சுந்தரராஜபெருமாள் வீதிஉலா நடத்தப்படவில்லை.

Next Story