அவுரங்காபாத் உயிரியல் பூங்காவில் - 5 குட்டிகள் போட்ட புலி


அவுரங்காபாத் உயிரியல் பூங்காவில் - 5 குட்டிகள் போட்ட புலி
x
தினத்தந்தி 26 Dec 2020 6:28 AM IST (Updated: 26 Dec 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

அவுரங்காபாத் உயிரியல் பூங்காவில் புலி ஒன்று 5 குட்டிகள் போட்டது.

மும்பை,

அவுரங்காபாத்தில் உள்ள மாநகராட்சி சித்தார்த் உயிரியல் பூங்காவுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக 5 புலிக்குட்டிகள் கிடைத்து உள்ளன. பூங்காவில் உள்ள சாமுர்தி என்ற புலி கர்ப்பமாக இருந்தது. இந்தநிலையில் அந்த புலி நேற்று காலை 5 புலி குட்டிகளை ஈன்று உள்ளது. மேலும் இது சாமுா்தி புலிக்கு 3-வது பிரசவம் ஆகும்.

இந்தநிலையில் 5 குட்டிகளை ஈன்றெடுத்த புலி நலமாக உள்ளதாகவும், அடுத்த 36 மணி நேரத்துக்கு புலியும், குட்டிகளும் கண்காணிப்பில் வைக்கப்படும் என உயிரியல் பூங்கா ஊழியர் ஒருவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " சாமுர்தியும் சித்தார்த் பூங்காவில் தான் பிறந்தது. தற்போது பிறந்து உள்ள 5 குட்டிகளையும் சேர்த்து இதுவரை அது 12 குட்டிகளை ஈன்றெடுத்து உள்ளது. அந்த 12 குட்டிகளும் உயிருடன் உள்ளன. சாமுர்தியின் ஜோடி புலியும் 8 ஆண்டுகளுக்கு முன் இங்கு தான் பிறந்தது " இவ்வாறு அவர் கூறினார்.

5 குட்டிகள் போட்டதால் அவுரங்காபாத் உயிரியல் பூங்காவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 9-ல் இருந்து 14 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story