நன்னிலம் அருகே உள்ள சொரக்குடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - அடுத்த மாதம் 7-ந் தேதி நடக்கிறது
நன்னிலம் அருகே உள்ள சொரக்குடியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அடுத்த மாதம்(ஜனவரி) 7-ந் தேதி நடக்கிறது.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சொரக்குடியில் அரசின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள இடத்தினை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், திருவாரூர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவைகளின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் வருகிற 7-ந் தேதி(வியாழக்கிழமை) அன்று நடக்கிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் நான்(அமைச்சர் காமராஜ்) உள்பட 6 அமைச்சர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணைகளை அன்றைய தினமே வழங்க உள்ளோம்.
முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனை துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் சுமார் 10 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். உயர் கல்வி, சுய வேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்ட உள்ளனர்.
இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ.,, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுய விபர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மேலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து பயன்பெறுமாறும் மேலும் https://thiruvarur.nic.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். இது நல்ல வாய்ப்பு என்பதால் திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நன்னிலம் ஒன்றியத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சிவேலங்குடி, கீரனூர், மேனாங்குடி,கோவில் திருமாளம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கலெக்டா் வே.சாந்தா தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான நேரடி வங்கி கடன், வேளாண் உற்பத்தியாளர்கள் சுழல்நிதி ஆகியவற்றை வழங்கி ேபசினார்.
இதில் முன்னாள் எம்.பி. கே.கோபால், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆசைமணி, தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவரும், ஒன்றியக்குழு துணை தலைவருமான சி.பி.ஜி அன்பழகன், நன்னிலம் ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் புகழேந்தி, ஊராட்சி மன்ற தலைவா் ெவங்கடேசன், திருக்கொட்டாரம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி செல்வராசு, துணைத் தலைவர் சித்ரா ஸ்ரீதர், பாவட்டகுடி ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி வேல்முருகன், துணை தலைவர் சசிகுமார் உள்பட கல்வி புரவலர்கள், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் அலுவலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story