கடலூரில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
கடலூரில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடலூர்,
கடலூர் நகர அ.தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அண்ணா பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு நகர செயலாளர் குமரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் நகரசபை தலைவர் சி.கே. சுப்பிரமணியன், சார்பு அணி செயலாளர்கள் பாலகிருஷ்ணன், வரதராஜன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, நகர துணை செயலாளர் கந்தன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் நகர தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அண்ணா பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு நகர செயலாளர் ராஜா தலைமையில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி மாலை அணிவித்தார். இதில் மாவட்ட அவை தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாணவரணி அமைப்பாளர் நடராஜன், அகஸ்டின், மீனவரணி தமிழரசன், நகர துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அஞ்சாபுலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிவக்குமார் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், நகர செயலாளர் சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர செயலாளர் செந்தில், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், நகர ஒருங்கிணைப்பாளர் கிட்டு, மாநில நிர்வாகிகள் ஸ்ரீதர், முரளி, சரிதா, ஒன்றிய நிர்வாகி சம்பத், சிலம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story