மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு; காளைகளுக்கு தயாராகும் சலங்கை மணிகள்
கொட்டாம்பட்டியில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு காளைகளுக்கு சலங்கை மணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சலங்கை மணி
மதுரை மாவட்டத்தின் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு் நடைபெற உள்ளது. இதற்காக காளை வளர்ப்போர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒன்றான கழுத்துமணி அணிவிப்பது வழக்கம். சலங்கை ஒலியுடன் காளை வரும் அழகே தனி.
ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் அதன் கழுத்தில் சலங்கை மணிகள் அணிவிக்கப்பட்டே அவிழ்க்கப்படுகின்றன. அத்தகைய சலங்கை மணி தயாரிக்கும் பணி கொட்டாம்பட்டி பகுதியில் 5 இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பிரத்யேகமான காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி, திண்டுக்கல் வெள்ளநாயகன்பட்டியில் பித்தளை மணிகள் தயாராகுகின்றன. மணிக்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ளன் நூல் மூலம் மிக அழகாக ’குஞ்சங்கள்’ தைத்தும் வடிவமைத்தும் தரப்படுகிறது. .ரகத்திற்கு தகுந்தாற்போல 1000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மணிகள் தரம் பிரித்து விற்கப்படுகின்றன. மேலும் தோல் பொருட்கள் மூலம் மணிகள் தைக்கப்படுகின்றன. கொரோனா தொற்றால் பல்வேறு நிகழ்ச்சிகள் தடைபட்டது.
3 மாதம் வியாபாரம்
தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழக அரசு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்த நிலையில் சலங்கை கழுத்து மணிகள், காளைகளை கட்டுவதற்கான கயிறுகள் மற்றும் மூக்கனாங்கயிறுகள் தீவிரமாக தயாரிக்கப்படுகிறது. மேலும் இப்போதே ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அழகு பொருட்கள் வாங்க திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் சலங்கை மணிகளை வாங்கி செல்கின்றனர். ஆண்டுக்கு 3 மாதம் மட்டுமே இந்த மணி வியாபாரம் நடைபெறுவதாக சலங்கை மணி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story