ஏரியில் மூழ்கி மாயமான வாலிபர் பிணமாக மீட்பு


ஏரியில் மூழ்கி மாயமான வாலிபர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 27 Dec 2020 5:48 AM IST (Updated: 27 Dec 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

நேமம் பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி மாயமான வாலிபர் பிணமாக மீட்டனர்.

சென்னை,

ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே உள்ள தண்டுரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் பட்டாபிராம் வள்ளலார் நகரை சேர்ந்த தனது நண்பரான சதீஷ் (31) என்பவருடன் நேமம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார்.

நீச்சல் தெரியாத அவர்கள் இருவரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினர். திருவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சதீஷ்குமாரை பிணமாக மீட்டனர். மாயமான சதீசை தேடி வந்தனர்.

நேற்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், 3 மணிநேர தேடுதலுக்கு பிறகு சதீசையும் பிணமாக மீட்டனர். இதுபற்றி வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story