குளித்தலை அருகே கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்த பெண்ணுக்கு கால் முறிவு
குளித்தலை அருகே கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்த பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
குளித்தலை,
கரூர் மாவட்டம்், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திரன் ஊராட்சிக்குட்பட்ட வாளாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மல்லிகா (வயது 48). இவர் நேற்று காலை இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சாலையோரம் சிமெண்டினால் அமைக்கப்பட்டிருந்த திட்ட மதிப்பீடு கட்டை உடைந்தது. இதனால் அவர் அருகில் இருந்த கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்துள்ளார். இதனால் காயம் ஏற்பட்டு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போராட்டம் நடத்தப்படும்
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், வாளாந்தூர் பகுதியில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பொதுகழிவறை கட்ட கோரி பலமுறை தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை கட்டப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டி உள்ளது.
இந்தநிலையில் நேற்று இயற்கை உபாதை கழிக்க சென்ற இப்பகுதியை சேர்ந்த மல்லிகா என்ற பெண் கழிவுநீர் சாக்கடையில் விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே வாளாந்தூர் பகுதியில் உடனடியாக பொதுகழிவறை மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Related Tags :
Next Story