பா.ஜனதாவில் இருந்து விலகிய ஏக்நாத் கட்சேக்கு அமலாக்கத்துறை சம்மன்
பா.ஜனதாவில் இருந்து விலகிய தேசியவாத காங்கிரசில் சேர்ந்த முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
மும்பை,
முந்தைய பா.ஜனதா ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் கட்சே. ஊழல் புகாரில் சிக்கியதால் 2016-ம் ஆண்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு கோர்ட்டு இவரை ஊழல் குற்றச்சாட்டில் குற்றம் அற்றவர் என கூறியது. ஆனாலும் அவர் கட்சியில் ஓரங்கப்பட்டார். அவருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் சேர்ந்தார்.
இதற்கிடையே புனே போசிரி பகுதியில் குடும்பத்தினருக்கு இடம் வாங்கிய விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை ஏக்நாத் கட்சேவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதுகுறித்து ஏக்னாத் கட்சே இ-மெயிலில் அமல்லாத்துறை தனக்கு சம்மன் அனுப்பி இருப்பதாக கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, "அந்த நிலம் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மாநில லஞ்ச ஒழிப்பு துறையினா் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்களால் எந்த சட்டவிரோதத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு அளித்தேன். தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும் செல்ல உள்ளேன் " என்றேன்.
Related Tags :
Next Story