லால்குடி தொகுதி புள்ளம்பாடியில் முதல்-அமைச்சர் தேர்தல் பிரசார இடத்தை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ப.குமார் ஆய்வு


லால்குடி தொகுதி புள்ளம்பாடியில் முதல்-அமைச்சர் தேர்தல் பிரசார இடத்தை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ப.குமார் ஆய்வு
x
தினத்தந்தி 27 Dec 2020 7:40 AM IST (Updated: 27 Dec 2020 7:40 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் லால்குடி தொகுதி புள்ளம்பாடியில் வருகிற 30-ந் தேதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைக்கிறது.

கல்லக்குடி,

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் லால்குடி தொகுதி புள்ளம்பாடியில் வருகிற 30-ந் தேதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைக்கிறது. மேலும் அவர் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடுகிறார். இதற்காக புள்ளம்பாடி பஸ்நிலையம் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் பார்வையிட்டு, பிரசாரத்துக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யவும், வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வகையில் நிறுத்த ஏற்பாடு செய்யவும் ஆலோசனை கூறினார். அந்த ஆய்வின் போது, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் டி.என்.சிவகுமார்(தெற்கு), ராஜாராம்(வடக்கு), நகர செயலாளர்கள் கல்லக்குடி பிச்சைபிள்ளை, புள்ளம்பாடி ஜேக்கப் அருள்ராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வமேரி மற்றும் ஒன்றிய, நகர, கிளைகழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story