விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் தேசிய உழவர் தின விழாவில் வலியுறுத்தல்


விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் தேசிய உழவர் தின விழாவில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Dec 2020 8:40 AM IST (Updated: 27 Dec 2020 8:40 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என திருவாரூரில் நடந்த தேசிய உழவர் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் நமது நெல்லை காப்போம் அமைப்பின் சார்பில் தேசிய உழவர் தினம் மற்றும் நுகர்வோர் தின விழா வேலுடையார் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு அமைப்பின் தலைவர் துரைசிங்கம் தலைமை தாங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தலைவர் தியாகபாரி, வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், கல்லூரி பேராசிரியர் பாக்கியலெட்சுமி, நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் ரமேஷ் மற்றும் விவசாயிகள், நுகர்வோர்கள், பெண்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

குைறந்தபட்ச ஆதார விலை

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க சட்ட பூர்வ நடவடிக்கையுடன், இதற்கான நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். அண்டை மாநிலமான கேரளா போன்று, தமிழ்நாட்டிலும் இயற்கை வேளாண்மைக்கான தெளிவான கொள்கைகளை அரசு உருவாக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஆதார விலையோடு பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்வதுடன், அவற்றை பொது வினிேயாகத் திட்டத்தில் மக்களுக்கு வழங்க வழி வகைகள் செய்ய வேண்டும்.

பாரம்பாிய அாிசி

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் அந்தந்த பகுதிகளில் விளையும் பாரம்பரிய அரிசி வகைகள் உணவாக வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை அரசு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்ேவறு தீா்மானங்கள் நிைறவேற்றப்பட்டன.

முன்னதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் வரவேற்றார். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிரிதரன் நன்றி கூறினார்.

Next Story