நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவின்றி பொங்கல் பரிசு வழங்கப்படும் அமைச்சர் காமராஜ் தகவல்


நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவின்றி பொங்கல் பரிசு வழங்கப்படும் அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 27 Dec 2020 8:44 AM IST (Updated: 27 Dec 2020 8:44 AM IST)
t-max-icont-min-icon

நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவின்றி பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் ெதாிவித்துள்ளார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பனங்குடி, ஆனைக்குப்பம், திருவாஞ்சியம் மற்றும் வாழ்க்கை ஆகிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நேரடி வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து ெகாண்டு 324 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.78 லட்சத்து 45 ஆயிரம் வங்கி கடனை வழங்கினார்.

பின்னர் நிருபா்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியதாவது:-

நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு, கைேரகை பதிவின்றி (பயோமெட்ரிக் முறை) வழங்கப்படும். கார்டுகளை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் பழைய நடைமுறையில் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

இதுவரை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 532 சர்க்கரை ரேஷன் கார்டுகள், அரிசி காா்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

பயோமெட்ரிக் முறை

பயோமெட்ரிக் முறை திட்டம் நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ளது. அவ்வப்போது பயோமெட்ரிக் முறையில் சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது. அவை அனைத்தும் சரி செய்யப்படும்.

கடந்த காலங்களில் தி.மு.க.வினர் மீது பல்வேறு ஊழல் வழக்கு உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வினர் மீதும், அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் தெரிவித்து பட்டியல் உள்ளதாக தி.மு.க. தலைவா் ஸ்டாலின் கூறுவது சிாிப்ைப ஏற்படுத்துகிறது. எங்கள் மீது கூறப்படும் ஊழல் புகார்களை எங்கு ேவண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ேளாம்.

அ.தி.மு.க. கூட்டணியின் முதல்-அமைச்சா் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ெதள்ளதெளிவாக அறிவித்துள்ளார். அ.தி.மு.க. கூட்டணி முதல்-அமைச்சா் வேட்பாளாில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு இவா் கூறினார்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, முன்னாள் எம்.பி. கே.கோபால், ஒன்றிய குழுத்தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராமகுணசேகரன், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சம்பத், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், கல்வி புரவலர்கள் பக்கிரிசாமி, சுவாதி கோபால், உதயகுமார், மனோகரன், கார்த்திகேயன், ஒன்றியகுழு உறுப்பினர் ராமநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி, சுவாமிநாதன், சக்திவேல், மரகதம், துணைத்தலைவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story