பொட்டல்குளம் அய்யன்மலை குபேர அய்யப்பசாமி கோவிலில் மண்டலபூஜை திரளான பக்தர்கள் தரிசனம்


பொட்டல்குளம் அய்யன்மலை குபேர அய்யப்பசாமி கோவிலில் மண்டலபூஜை திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 27 Dec 2020 10:10 AM IST (Updated: 27 Dec 2020 10:10 AM IST)
t-max-icont-min-icon

பொட்டல்குளம் அய்யன்மலை குபேர அய்யப்பசாமி கோவிலில் நேற்று மண்டலபூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள பொட்டல்குளம் அய்யன்மலை குபேர அய்யப்பசாமி கோவிலில் மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், உஷ பூஜையும், கலச பூஜையும், அஷ்டாபிஷேகமும் நடந்தது. 10 மணி முதல் பகல் 12 மணி வரை அய்யப்ப சாமிக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கலச அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் மற்றும் உச்சிகால பூஜையும் நடந்தது.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜையும், ஹரிவராசனமும் நடைபெற்றது. இதில் வெளி மாவட்ட பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து அய்யப்பசாமிக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

குமரி மாவட்டத்தில் தற்போது குபேர அய்யப்பசாமி கோவிலுக்கு அதிக பக்தர்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.

திரளானோர் பங்கேற்பு

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலப்பை மக்கள் இயக்கத் தலைவரும் சினிமா தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், சட்ட ஆலோசகர் வக்கீல் பாலகிருஷ்ணன், அகில பாரத அய்யப்பா சேவா சங்கமகளிர் அணி தலைவி பேராசிரியை ஸ்ரீரங்கநாயகி, அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் சித்தர் தியாகராஜ சுவாமி, நிர்வாகிகள் அய்யப்பன், முத்தமிழ்ச் செல்வன், விசுவாமித்திரர் சைவ சபா உழவாரப்பணி தொண்டர்கள் மற்றும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story