கன்னியாகுமரி சுனாமி நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து கலெக்டர் அஞ்சலி அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தினர்
சுனாமி நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் உள்ள ஸ்தூபியில் கலெக்டர் அரவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி,
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 -ந் தேதி குமரி மாவட்ட கடலோர பகுதிகளை சுனாமி ஆழிப்பேரலை தாக்கியது. இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுனாமி நினைவு ஸ்தூபியும், பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுனாமியால் இறந்தவர்களுக்கு 16-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நினைவு ஸ்தூபி பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு மற்றும் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மலர் வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் தம்பித்தங்கம், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் சீனிவாசன், கன்னியாகுமரி நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன், மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணபிள்ளை, மாவட்ட பொதுச்செயலாளர் தாமஸ், கொட்டாரம் நகர தலைவர் அரிகிருஷ்ண பெருமாள், அகஸ்தீஸ்வரம் நகர தலைவர் கிங்ஸ்லி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்னம் பெருமாள், மாவட்ட செயலாளர் மகாலிங்கம், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
தி.மு.க. சார்பில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் கன்னியாகுமரி நகர தி.மு.க. செயலாளர் குமரி ஸ்டீபன் மற்றும் நிர்வாகிகள் கோபி ராஜன், ரூபின் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்க துணை தலைவர் ஜேம்ஸ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர், துணைச்செயலாளர் தனிஷ், கொட்டாரம் நகர நிர்வாகி அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் ஜெயமணி, செல்வராஜ், அலெக்ஸ், கிரி, சிங்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் கன்னியாகுமரி நகர செயலாளர் அருள்ராஜ் உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story