கொரோனாவால் வருமானம் பாதிக்கப்பட்டதால் விரக்தி: சேவூர் குப்பை கிடங்கில் மகளை விட்டுச்சென்றது பெண் டாக்டர்
சேவூர் அருகே குப்பை கிடங்கில் மயக்க நிலையில் தனது மகளை விட்டுச்சென்றது பெண் டாக்டர் என்பது தெரியவந்துள்ளது. கொரோனாவால் வருமானம் பாதிக்கப்பட்டதால் விரக்தியில் தற்கொலை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது.
சேவூர்,
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைகள் தரம்பிரிக்கும் கிடங்கு புளியம்பட்டி சாலையில் உள்ளது. இந்த குப்பை கிடங்கிற்கு சுற்றுச்சுவர் கிடையாது. ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு அந்த குப்பை கிடங்கு வழியாக பொதுமக்கள் சென்றனர்.
அப்போது குப்பை கிடங்கில் மூக்கு கண்ணாடி மற்றும் முக கவசம் அணிந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த பெண் அருகே 8 வயது மதிக்கத்தக்க சிறுமி படுத்து இருந்தாள். எனவே அங்கு படுத்திருந்த சிறுமியும், அந்த பெண்ணும் ஓய்வு எடுக்கலாம் என்று பொதுமக்கள் நினைத்து அங்கிருந்து சென்று விட்டனர்.
மதியம் 2 மணிக்கு பிறகு அங்கு அந்த பெண்ணை காணவில்லை. ஆனால் சிறுமி மட்டும் படுத்து கிடப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த சிறுமி அருகே சென்று பார்த்தனர். அப்போது அந்த சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதையும் சிறுமியின் நெற்றியில் காயம் மற்றும் கொப்பளங்கள் இருப்பதையும் வலியால் துடிப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சேவூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது அவசர சிகிச்சைப்பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெண் டாக்டர்
இதையடுத்து அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுமி அருகே அமர்ந்து இருந்த பெண் மதியம் 1.50 மணிக்கு தனியாக நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதையடுத்து அப்பகுதியில் முதலில் அந்த பெண்ணை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தண்டுக்காரன்பாளையம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு பெண் உலவுவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், தனது பெண் குழந்தையை உயிருக்கு ஆபத்தான நிலையில் குப்பைக்கிடங்கில் போட்டு விட்டுச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த பெண் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள தியாகதேனாஹல்லி பகுதியை சேர்ந்த சைலஜாகுமாரி (வயது 39) என்பதும், அவர் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் என்பதும் தெரியவந்தது. இவருக்கும், இவரது கணவரான என்ஜினீயர் தர்மபிரசாத்துக்கும் (42) இடையே மனவருத்தம் இருந்து வருவதும் தெரியவந்தது. எனவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து வழக்கு கடந்த 5 வருடமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இவர்களுக்கு கியாரா (5) என்ற ஒரே மகள் உள்ளார். அவள் தியாகதேனாஹல்லி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி.படித்து வருகிறாள்.
கொரோனாவால் தொழில் பாதிப்பு
பெங்களூரூவில் தனது வயதான தந்தை மற்றும் மகளுடன் வசித்து வந்த சைலஜாகுமாரி, அதே பகுதியில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் மருத்துவ தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருவாய் இல்லாமல் பண நெருக்கடியில் சைலஜாகுமாரி சிக்கி தவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சைலஜாகுமாரி மருத்துவத் துறையில் வேலை தேடி தனது மகளுடன் வெளியூருக்கு செல்ல முடிவு எடுத்துள்ளார். இதற்காக பெங்களூரூவிலிருந்து கடந்த 24-ந் தேதி இரவு பஸ்சில் புறப்பட்டு மைசூரு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து சத்தியமங்கலம் வழியாக திருப்பூருக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பஸ் பயணம் ஒத்துக்கொள்ளாமல் தனது மகள் வாந்தி எடுத்ததால் தண்டுக்காரன்பாளையத்தில் சைலஜாகுமாரி இறங்கியுள்ளார்.
தற்கொலைக்கு முயற்சி
அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த சைலஜாகுமாரிக்கு தற்கொலை எண்ணம் தோன்றியுள்ளது. உடனே தனது மகளுக்கு கையில் வைத்திருந்த ஒரு பாட்டில் சளிக்கு கொடுக்கும் டானிக் மருந்து முழுவதையும் குடிக்கவைத்துள்ளார். இதில் மயக்கமடைந்த தனது மகளை அந்த பகுதியிலிருந்த ஊராட்சி குப்பை பிரிக்கும் கொட்டகை முன்பு படுக்க வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
அதோடு கையிலிருந்த எலிமருந்தையும் சைலஜாகுமாரி சாப்பிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து எங்கு செல்வது என தெரியாமல் தண்டுக்காரன்பாளையம் பகுதியிலேயே சுற்றி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதி பொதுமக்கள் சைலஜாகுமாரியின் நடமாட்டம் குறித்து சேவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் சைலஜாகுமாரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அந்த பெண்ணை அவினாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பின்னர் நடத்திய விசாரணையில்தான் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து குழந்தையை கவனிப்பதில் கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாக இருந்ததாகவும் சைலஜாகுமாரி மீது சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சைலஜாகுமாரிக்கு சிகிச்சை அளிக்க அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Related Tags :
Next Story