மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு


மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2020 9:47 PM IST (Updated: 27 Dec 2020 9:47 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், பெத்ததாளப்பள்ளியில் எம்.ஜி. ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமையில் கிட்டம்பட்டியில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி, முன்னாள் ஊராட்சி செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் பால்வளத் தலைவர் தென்னரசு, ஒன்றியக்குழுத் தலைவர் அம்சாராஜன், நகர செயலாளர் கேசவன், முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து, ஒன்றிய அவைத் தலைவர் அமீர்ஜான், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரை ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஊத்தங்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் ஹமீத், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ், நகர செயலாளர் சிவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் வேடி, தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊத்தங்கரை 4 ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன், ஒன்றிய அவைத்தலைவர்கள் சுப்பிரமணி, கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் சேட்டுக்குமார் மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, சார்பு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஊத்தங்கரை 4 ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அறக்கட்டளை தலைவர் இளையராஜா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் துணைத்தலைவர் கண்ணன், துணை செயலாளர் மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரையில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட இணைச்செயலாளர் கண்மணி சிவக்குமார் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் சிவமணி, அருணகிரி, நகர செயலாளர் சுரேஷ், மாவட்ட மீனவர் அணி செயலாளர் பழனி, மாவட்ட மகளிரணி செயலாளர் வள்ளி மற்றும் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், பேரிகை பஸ் நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில், மாவட்ட கவுன்சிலர் வெங்கடாசலம் என்ற பாபு, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சரவணன், அப்பையா, ஜெயசாரதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், ெதாண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story