மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு


மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2020 9:53 PM IST (Updated: 27 Dec 2020 9:53 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அரூர், 

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சம்பத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதில் அரசு வக்கீல் பசுபதி, ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர், நகர செயலாளர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரிமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் ராமசாமி கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைைம தாங்கி எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் குமார், போக்குவரத்து மண்டல தலைவர் சிவம், நகர செயலாளர் காந்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் மாது, ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரியசாமி, கவிதா நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பென்னாகரம் அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பால்வள தலைவர் டி.ஆர். அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வேலுமணி, அன்பு, நகர செயலாளர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவி, கலைவாணன், ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ், துணைத்தலைவர்கள் நரசிம்மன், சுசீலா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, முன்னாள் தொகுதி செயலாளர் பச்சியப்பன், பாசறை ஒன்றிய செயலாளர் திருமால்வர்மா, கூட்டுறவு வங்கி தலைவர் அருவி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் கொளந்தைசாமி, ஊராட்சி செயலாளர்கள் செல்வம், பிரேம்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கடத்தூர் புதிய பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், நகர செயலாளர் சந்தோஷ், முன்னாள் நகர செயலாளர் சசிக்குமார் ஆகியோர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள் கலந்து ெகாண்டனர்.

இதேபோல் கடத்தூர் ஒன்றிய மற்றும் நகர அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Story