மாவட்ட செய்திகள்

திருமானூா் அருகே பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தை கிறிஸ்துமஸ் குடிலில் வீச்சு + "||" + A 3-day-old baby girl born near Thirumana is in a Christmas hut

திருமானூா் அருகே பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தை கிறிஸ்துமஸ் குடிலில் வீச்சு

திருமானூா் அருகே பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தை கிறிஸ்துமஸ் குடிலில் வீச்சு
திருமானூர் அருகே பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தையை கிறிஸ்துமஸ் குடிலில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில் ஆதரவற்ற சிறுவர்களுக்கான காப்பகம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைையயொட்டி கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்று அந்த குடிலில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் குடில் உள்ள பகுதிக்கு சென்று பார்த்தபோது, பச்சிளம் பெண் குழந்தை ஒன்று குடிலில் கிடந்தது. இது குறித்து காப்பகத்தினர் திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், குழந்தையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், அந்த குழந்தை பிறந்த 3 நாட்களே ஆகியிருக்கலாம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை குடிலில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை வலைவீசி தேடி வருகின்றனர். அதுவரை குழந்தையை காப்பகத்திலேயே வைத்திருங்கள் என்று போலீசார் அறிவுறுத்தி சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி
தாத்தா-பாட்டியுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 வயது குழந்தை, மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
2. மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி
மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி தாத்தா-பாட்டி கண்எதிரே பரிதாபம்.
3. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் கைது பரபரப்பு வாக்குமூலம்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
4. வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து குழந்தை பலி அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து குழந்தை பலியானது. அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. நாகர்கோவிலில் பரபரப்பு விஜயகுமார் எம்.பி. வீட்டு முன் வெடிகுண்டு வீச்சு
நாகர்கோவிலில் அ.தி. மு.க. எம்.பி. வீட்டு முன் வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை