காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.24 கோடியில் நவீன வசதிகளுடன் பக்தர்கள் தங்கும் விடுதி இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்; அடுத்த மாதம் கட்டிடம் திறக்கப்பட வாய்ப்பு


காஞ்சீபுரம் அருகே கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி இறுதிக்கட்டத்தை எட்டி திறப்புக்குதயாராகி வருகிறது
x
காஞ்சீபுரம் அருகே கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி இறுதிக்கட்டத்தை எட்டி திறப்புக்குதயாராகி வருகிறது
தினத்தந்தி 29 Dec 2020 2:56 AM IST (Updated: 29 Dec 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே ரூ.24 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதியின் கட்டுமான இறுதிக்கட்ட பணிகள் விரைவில் நிறைவு பெறவுள்ளது. இதையொட்டி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரூ.24 கோடியில் விடுதிகள்
கோவில் நகரமான காஞ்சீபுரத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை தந்து காஞ்சீபுரத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களையும், புராதனச் சின்னங்களையும் பார்வையிட்டு கண்டு களித்து வருகின்றனர்.

இந்நிலையில் நகரில் பக்தர்கள் தங்குவதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் விடுதிகள், வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஓரிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி ஒலிமுகம்மது பேட்டை அருகே ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் சுமார் ரூ.24 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் 5 தளங்களுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதிகளை கட்டி முடிப்பதற்காக இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பக்தர்கள் மகிழ்ச்சி
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி மூலம் கட்டப்படும் விடுதியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 34 அறைகள், உணவகங்கள், நவீன வசதிகளுடன் கூடிய கூட்ட அரங்கம் ஆகியவை அமைக்கப்படுகின்றது.

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து ஆன்மீகச் சுற்றுலாவாக பஸ்களில் வரும் பக்தர்கள் ஒரே இடத்தில் 300 பேர் வரை தங்குவதற்கு வசதியாக தங்கும் விடுதி வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த பணிகள் விரைவில் நிறைவடையும் நிலையில், உள்ளதால் வெளியூர் பக்தர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

மேலும் விடுதியின் அருகே 150 பஸ்கள் நிறுத்தும் வகையில் ரூ.5.41 கோடி செலவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வை-பை, சோலார் மின் விளக்குகள், கழிப்பறைகள், ஓட்டுநர்கள் தங்குமிடம் மற்றும் புராதன சிலைகள் மற்றும் வரலாற்று தகவல் வெளிப்படுத்தும் அருங்காட்சியம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் வரும் ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story