பி.எம்.சி. வங்கி மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்; இன்று ஆஜராக உத்தரவு


பி.எம்.சி. வங்கி மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்; இன்று ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 29 Dec 2020 5:50 AM IST (Updated: 29 Dec 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

பி.எம்.சி. வங்கி மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் மனைவிக்கு அமலாகத்துறை சம்மன் அனுப்பி இன்று ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.

முறைகேடு
பி.எம்.சி. என்று அழைக்கப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மிகப்பெரிய ஊழல் நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. எச்.டி.ஐ.எல். நிறுவனம் வங்கியில் கடன் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது.

இதையடுத்து, மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பி.எம்.சி. வங்கிக்கு ரூ.4 ஆயிரத்து 355 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். இதை அடிப்படையாக வைத்து மத்திய அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பி.எம்.சி. வங்கி நிறுவனர் ராணா கபூர், எச்.டி.ஐ.எல். நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சஞ்சய் ராவத் மனைவிக்கு சம்மன்
இந்த வழக்கில் பி.எம்.சி. வங்கியிலிருந்து கணக்கில் வராத பணம் எடுத்ததாக சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரிடம் விசாரிக்க அமலாக்கப்பிரிவு ஏற்கனவே 2 முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இரு தடவையும் உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் சட்டவிரோதப் பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் 3-வது முறையாக வர்ஷா ராவத்துக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பையில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

பா.ஜனதாவில் இருந்து விலகிய மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கடந்த மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டி அமலாக்க பிரிவு அவர் நாளை (புதன்கிழமை) ஆஜராக சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story