ராசிபுரத்தில் ரெயில்களை நிறுத்தக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ராசிபுரத்தில் ரெயில்களை நிறுத்தக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Dec 2020 7:15 PM IST (Updated: 29 Dec 2020 7:15 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் ரெயில்களை நிறுத்தக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ராசிபுரம்,

ராசிபுரத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ராசிபுரம் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ராசிபுரம் பிரதேச குழுவின் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ராசிபுரத்தில் ரெயில்களை நிறுத்தி செல்லக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஊரடங்கில் தளர்வு கொண்டு வரப்பட்ட பிறகு ராசிபுரத்தில் ரெயில்கள் நிற்காததால் வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதில் மூத்த நிர்வாகி ராஜகோபால், ராசிபுரம் நகர செயலாளர் சண்முகம், பிரதேச குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story