மும்பை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு 100 நாட்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தகவல்

மும்பை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு 100 நாட்கள் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக மராட்டிய மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் எச்.கே. பாட்டீல் கூறினார்.
மக்கள் சந்திப்பு
காங்கிரஸ் நிறுவன நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த எச்.கே.பாட்டீல் நேற்று 2022-ம் ஆண்டு நடைபெறும் மும்பை மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் எச்.கே. பாட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், மும்பை மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம். மும்பை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் 100 நாட்கள் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க உள்ளோம் என்றார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் காங்கிரஸ் நிறுவன நாள் விழாவில் எச்.கே. பாட்டீல் பேசியதாவது:-
விமர்சிக்க கூடாது
மராட்டியத்தில் பா.ஜனதாவை விலக்கி வைப்பதற்காக தான் சிவசேனாவுடன் காங்கிரஸ் கைகோர்த்து உள்ளது. இந்த அரசு செயல்படுவதற்காக குறைந்தபட்ச செயல்திட்டமும் வகுக்கப்பட்டு உள்ளது. மராட்டிய அளவில் கூட்டணி தொடர்கிறது.
தேசிய அளவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சிவசேனா அங்கம் வகிக்கவில்லை. இந்த நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமை பற்றி சிவசேனா விமர்சிக்கக்கூடாது.
சகித்து கொள்ள மாட்டோம்
மாட்டியத்தில் காங்கிரஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய நாங்கள் பாடு படுவோம். எங்களது கட்சி தலைமை பற்றி விமர்சனம் செய்தால் அதனை சகித்து கொள்ள மாட்டோம்.
இதேபோல மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து கட்சி மேலிடம் தான் எங்களுக்கு வழிகாட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story