உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் தர்ணா
புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகம் பற்றி தனக்கு பாடம் எடுப்பவர்கள் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக இதுகுறித்து பிரதமருடன் நேரடியாக விவாதிக்க தயார்? என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.
இந்தநிலையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story